காங்கிரஸை விட ஒரு நச்சுக் கட்சி எதுவுமே இல்லை - மோடி பதிலடி
பன்ஸ்வாரா, ராஜஸ்தான்: பாஜக தலைவர்களை நச்சுத்தன்மை கொண்டவர்கள் என்று சொல்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியை விட நச்சுக் கட்சி இந்தியாவில் வேறு எதுவுமே கிடையாது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா பேசுகையில், பாஜக தலைவர்கள் நச்சுத்தன்மை கொண்டவர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு அதே ராஜஸ்தானில் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று பேசிய மோடி பதிலடி கொடுத்தார்.
அவர் கூறுகையில், காங்கிரஸை விட நச்சுக் கட்சி இந்தியாவில் வேறு எதுவுமே இல்லை. சோனியா காந்தி சொல்லும் அதிகாரம் என்ற விஷத்தை அதிக அளவில் அருந்திய கட்சி காங்கிரஸ மட்டுமே.

ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் சோனியாவின் மகன் ராகுல் காந்தி, அதிகாரத்தை விஷம் என்று வர்ணித்தார். ஆனால் நாடு சுதந்திரமடைந்த பின்னர் அவர் சார்ந்த கட்சிதான் 50 வருடம் இந்த நாட்டை ஆண்டுள்ளது. எங்காவது இத்தனை நீண்ட காலம் விஷத்தை அருந்தியவர்களை நீங்கள் பார்த்து்ள்ளீர்களா... இப்போது சொல்லுங்கள் அதிக நச்சுத்தன்மை கொண்ட கட்சி எது.. காங்கிரஸ்தான் அது.
தன்னைச் சுற்றி பத்திரிக்கைகாரர்கள் இருந்தால் மட்டும்தான் ஏழ்மை, வறுமை குறித்துப் பேசுவார் ராகுல் காந்தி. தனது வீட்டுக்குப் பக்கத்தில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்காக ராகுல் காந்தி என்ன செய்திருக்கிறார்..அதைச் சொல்ல முடியுமா அவரால்.
ராகுல் காந்தியின் டெல்லி பங்களாவுக்கு அருகே கிட்டத்தட்ட 800 பேர் வசிக்கும் குடிசைப் பகுதி உள்ளது. அங்கு 2 டாய்லெட்டுகளே உள்ளன. இதெல்லாம் காங்கிரஸாரின் கண் பார்வையில் படுவதே இல்லை என்றார் அவர்.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications