பாட்னாவில் மோடி கூட்டம்- 11 சிறப்பு ரயில்கள்; 3 ஆயிரம் பேருந்துகள்!
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 27-ந் தேதி நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்காக 11 சிறப்பு ரயில்கள், 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடனான 17 ஆண்டு கால உறவு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அக்கட்சி ஆளும் பீகார் தலைநகர் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி 27-ந் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் இப் பொதுக்கூட்டத்தை, ஐக்கிய ஜனதாதளம் கட்சிதலைவர் நிதிஷ் குமாரின் சொந்த மண்ணில், மோடியின் செல்வாக்கை எடுத்துக்காட்டுவதற்கு ஓரு வாய்ப்பாக பயன்படுத்த பாஜக முனைப்பு காட்டுகிறது.

இக் கூட்டத்துக்காக 11 சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. அத்துடன் 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவின் 91 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்கள், நிர்வாகிகள் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டத்தில் மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ள அழைப்பு விடுத்து ஆதரவு திரட்டுகின்றனர்.
பாட்னா பொதுக்கூட்டத்துக்கு முந்தைய நாள் 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்கிற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications