ரஷ்யா, ஜப்பானுடனான உறவு மேம்படும்: நரேந்திர மோடி உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவு அதிகரிக்கும் என்று பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திரமோடி தெரிவித்தார்.

Personally, I have a wonderful experience of working with Japan as CM. I am sure we will take India-Japan ties to newer heights.
— Narendra Modi (@narendramodi) May 19, 2014

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும், ஜப்பான் பிரதமர் அபி சின்சோ ஆகியோரும் தனித்தனியே நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அது குறித்து தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் மோடி குறிப்பிடுகையில், "நல்வாழ்த்து கூறிய புடினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு வருங்காலத்தில், மேலும் பலமடையும் என்று எதிர்பார்க்கிறேன். மிகவும் சோதனையான காலகட்டங்களில் எல்லாம், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து நின்றுள்ளன. இனிமேலும் பல தரப்பட்ட அம்சங்களில் நமது உறவு மேலும் பலப்படுத்தப்படும். இவ்வாறு புடினுக்கு பதிலளித்துள்ள மோடி, ஜப்பான் பிரதமர் வாழ்த்துக்கு பதிலளித்து கூறுகையில், ஜப்பான் பிரதமரின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

I thank President Putin for his good wishes. Looking forward to making our relations with Russia even stronger in the years to come.
— Narendra Modi (@narendramodi) May 19, 2014

இந்தியா-ஜப்பான் உறவு பலப்படுவது இரு நாடுகளுக்குமே நல்லது. குஜராத் முதல்வராக பணியாற்றும் காலகட்டத்தில், ஜப்பானுடன் இணைந்து தொழில்முறையாக செயலாற்றியதில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான உறவு புதிய உயரங்களை தொடும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

I spoke to President Hollande over the telephone & accepted his wishes. We both understand the importance of strong India-French ties.
— Narendra Modi (@narendramodi) May 19, 2014

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூனின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, ஐக்கிய நாடுகள் சபையுடன் இந்தியாவுக்கு உள்ள நீண்ட மற்றும் பெருமைமிகு உறவை மதிப்போம். அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றி, ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பான பங்களிப்பை இந்தியா அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, ஸ்பெயின், ஹாலந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாட்டு அதிபர்களுக்கும் அவர்களின் வாழ்த்துக்களுக்காக மோடி நன்றி தெரிவித்துள்ளதுன், இந்த நாடுகளுடன் உறவை பலப்படுத்த இந்தியா உறுதியாக உள்ளதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+