அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர்... சொல்கிறார் ராம் விலாஸ் பஸ்வான் !
ஜம்மு: அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தான் இருப்பார் எனவே காங்கிரஸ் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி தான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக இருப்பார். அதனால் காங்கிரஸ் கவலைப்படத் தேவையில்லை'.

நாட்டு மக்களின் ஆதரவு மோடிக்கு இருக்கிறது. அவருக்கு எதிரான கருத்துக்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது என்று கூறினார். சோனியா காந்தி குறித்தும், அவரது மருமகன் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பாஸ்வான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
முன்னதாக ரேபரேலி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தை விமர்சித்து பேசினார். அப்போது அவர் நாட்டில் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, மோடி அரசு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. மோடி என்பவர் இந்தியாவின் பிரதமர்தான். இந்தியாவின் பேரரசர் அல்ல என்று கூறியிருந்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications