ராஜீவ்காந்தி 25வது நினைவுநாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமான காங்கிரசார் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர பூமியில், அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, மகன் ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21ம் தேதி, ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ பெரும்புதூரில் சர்வமத பிரார்த்தனை, மோட்சசாந்தி பூஜை, சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாங்காடு முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி குழுவினரின் இலவச மருத்துவ முகாம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரசார் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தினம் என்பதால், தமிழகம் முழுவதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் டாக்டர் P.சந்திரமோகன் தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு பிரபாகர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மாவட்ட ஆட்சியர் திரு.சத்யப்பிரதாசாகு உறுதிமொழி வாசிக்க, அதனை அனைத்து ஊழியர்களும் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications