வாஜ்பாய் பெயரில் நாட்டிலேயே நீளமான மெட்ரோ பஸ் சாலை திறப்பு..!
போபால்: இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பஸ் சாலை என்ற பெயரை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள சாலை பெறுகிறது. இந்த நீண்ட நெடிய சாலைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மை பஸ் என்று இந்த பஸ் போக்குவரத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக சாலைக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியின் கீழ் உள்ள மத்தியப் பிரதேசத்தில், இந்த சாலை திறக்கப்பட்டுள்ளது தேர்தலை மனதில் கொண்டுதான் என்றும் ஒரு சலசலப்பை காங்கிரஸ் கிளப்பியுள்ளது. ஆனால் அதை பாஜக மறுத்துள்ளது.

24 கிலோமீட்டர் சாலை
போபால் நகரில் 24 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பஸ் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக நீளமான பிரத்யேக பஸ் பாதை இதுதான்.

தொடங்கி வைத்தார் சிவராஜ் செளகான்
போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்த பாதையை முதல்வர் சிவராஜ் செளகான் திறந்து வைத்து, வாஜ்பாய் பெயரைச் சூட்டுவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கமல்நாத் வரவில்லை
இந்த விழாவுக்கு போபாலைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான கமல்நாத்தும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் வரவில்லை.

காங். எம்.எல்.ஏ. புறக்கணிப்பு
போபாலில் உள்ள ஒரே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஆரிப் அக்கீலும் நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்தார். போபாலைச் சேர்ந்தவரான மறைந்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் பெயரை இந்த சாலைக்கு வைக்காததைக் கண்டித்து அவர் புறக்கணித்தார்.

26 ஏசி பஸ்கள்
இந்த விழாவின்போது நகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 26 புதிய குளிர்சாதன தாழ்தளப் பேருந்துகளையும் அறிமுகப்படுத்தினார் செளகான்.

ரூ. 26 கட்டணம்
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மை பஸ் போக்குவரத்தில், 24 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்து விடலாம். இதற்கான பயணக் கட்டணம் ரூ. 26 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications