குஜராத்தில் நடந்த வன்முறையை பார்த்து நாடே அதிர்ச்சி அடைந்தது: மோடி
டெல்லி: கோட்டா விவகாரம் தொடர்பாக குஜராத்தில் நடந்த கலவரங்களால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ரேடியோ மூலம் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு மான் கி பாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடி இன்று ரேடியோ மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,

குஜராத்
அண்மையில் குஜராத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. காந்தி மற்றும் பட்டேலின் மண்ணில் நடந்த வன்முறையால் தேச மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

குஜராத் சகோதரர்கள்
குறுகிய காலத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவிய குஜராத் சகோதர, சகோதரிகளை பாராட்டுகிறேன். அவர்கள் துரிதமாக செயல்பட்டு மாநிலத்தில் அமைதி நிலவ வழிவகுத்துள்ளனர்.

முன்னேற்றம்
அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை தான் சரியான வழி ஆகும். பிரச்சனையை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்.

மசோதா
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் 13 அம்சங்கள் சேர்க்கப்படும். இந்த மசோதா குறித்த தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் இடையே இது குறித்து அச்சமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

வங்கி கணக்கு
ஜன தன் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. அந்த திட்டத்தின் கீழ் சுமார் 17.74 லட்சம் புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஏழை மக்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாமல் வங்கியில் கணக்கு துவங்க முடியும். ஏழை மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.22 ஆயிரம் கோடி பணத்தை வங்கி கணக்கில் போட்டுள்ளனர் என்றார் மோடி.


Click it and Unblock the Notifications
