அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு செய்யப்போவது என்ன? எதிர்கால பிளான் குறித்து பேசிய அமித்ஷா!
அகமதாபாத்: அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இயற்கை விவசாயம் செய்யப்போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, தனது ஓய்வு கால திட்டம் குறித்து பேசினார். இந்து வேதங்களை படித்தல், இயற்கை விவசாயம் ஆகியவற்றின் மூலம் தனது ஓய்வு காலத்தை கழிக்க திட்டமிட்டு இருப்பதாக அமித்ஷா பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவிலும் சரி, தேசிய அளவிலும் சரி.. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக மிகவும் செல்வாக்கு மிக்க நபராகவும் அதிகாரமிக்க நபராகவும் விளங்கி வருகிறார்.

ஓய்வு கால திட்டம் என்ன?
குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமித்ஷா, இன்று அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தனது ஓய்வு கால திட்டம் குறித்து பேசினார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது:- பொதுவாழ்வில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு எஞ்சியுள்ள எனது வாழ்க்கை முழுவதையும் வேதங்கள் உபநிடதங்கள் வாசிப்பிலும், இயற்கை விவசாயத்திலும் கழிக்க திட்டமிட்டுள்ளேன்.
இயற்கை விவசாயம் என்பது ஆர்கானிக் விவசாயம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்கானிக் விவசாயத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ரசாயன உரங்கள் மூலம் தயாரிக்கப்படும் கோதுமையில், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
இயற்கை விவசாய விளைச்சல்
இயற்கை விவசாயம் என்பது உடலுக்கு நோய் வராமல் தடுப்பது மட்டும் இன்றி, ஒருவர் மருந்துகளை சார்ந்து இருக்கும் நிலையும் ஏற்படாமல் தடுக்கிறது. எனது விவசாய நிலத்தில் கூட 1.5 மடங்கு அதிகமாக தற்போது இயற்கை விவசாய விளைச்சல் அதிகரித்துள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, தனது உடல் எடையை எவ்வாறு குறைத்தேன் என்பது பற்றி பேசியிருந்தார். இது குறித்து அமித்ஷா கூறுகையில், "போதுமான அளவு தூங்குவது, சுத்தமான குடிநீரை பருகுவது, உணவு மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டதன் மூலம் கடந்த 4.5 ஆண்டுகளில் எனது வாழ்க்கை முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வந்தேன்.
இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்
தற்போது அலோபதி மருந்துகளை நான் உட்கொள்வது இல்லை. இளைஞர்கள் 2 மணி நேரம் உடல் பயிற்சி, 6 மணி நேரம் தூக்கம் ஆகியவற்றை கடைபிடித்து நல்ல உடல் நலனை பேண வேண்டும்" என்றார். உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவுக்கு தற்போது 60 வயதாகிறது. பாஜகவில் 75 வயதான பிறகு அரசியலில் இருந்து மூத்த தலைவர்கள் ஒதுங்கி கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
-
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications