4வது முறையாக ஒடிஷா முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்!
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஒடிஷா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பாரதிய ஜனதா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதனைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஒடிஷா மாநிலத்தின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், நவீன் பட்நாயக்கும் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
நவீன் பட்நாயக்குடன் 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications