ராகுல் காங். தலைவரானால் 2019ல் மிகப்பெரிய மாற்றம் வரும்... இது சித்து ஜோசியம்!

ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்வது மிகப் பொருத்தமான முடிவாக இருக்கும் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ் : ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிப்பது நிச்சயமாக கட்சிக்கு மாற்று சக்தியை அளிக்கும் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்குப் பிறகு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அந்தக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சோனியாகாந்தியும் விரைவில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

இந்நிலையில் மத்திய இணைஅமைச்சர் விஜய் சம்ப்லா, ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் முடிவு அவர்களுக்கு அவரே குழி தோண்டிக் கொள்ளும் செயல் என்று விமர்சித்துள்ளார். மேலும் ராகுலை தலைவராக நியமித்தன் மூலம் இந்தியாவில் இருந்தே அந்தக் கட்சி எதிர்காலத்தில் மறைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

 சித்து பதிலடி

சித்து பதிலடி

அமைச்சரின் இந்த கருத்துக்க பஞ்சாப் உள்ளாட்சிகள் துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பதிலடி கொடுத்துள்ளார். அமிர்தசரசில் எம்பி குர்ஜித் ஆஜ்லா ஒரு கிராமத்தை தத்தெடும்மார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்து, காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த போது கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்தியும், அவருடைய மகன் ராகுல்காந்தியும் தங்களுக்கான அதிகாரங்களை தியாகம் செய்தனர் என்று கூறியுள்ளார்.

 ராகுல் சிறந்த குணம் படைத்தவர்

ராகுல் சிறந்த குணம் படைத்தவர்

யார் வேண்டுமானாலும் பிரதமராக இருக்கலாம் என்று சொன்னவர்கள் அவர்கள், இது அவர்களின் குணத்தை காட்டுகிறது. 10 ஆண்டு ஆட்சியில் சோனியாகாந்தி ராகுல் காந்திக்கு பின்பலமாக இருக்கிறார். ஆனால் தற்போது நிலைமை கடினமாக உள்ளது. ராகுல் காந்தி பலவிதமான தாகுதல்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறார். அவர் சிறந்த குணம் படைத்தவர், என்று சித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

 நாகரீகம் தெரிந்தவர்கள்

நாகரீகம் தெரிந்தவர்கள்

ஆம்ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் ஒரே ஒரு முறை தான் ஆதரவு கேட்டு சந்தித்தேன். அதை அடுத்த கனமே ஊடகங்களிடம் அவர் போட்டு உடைத்தார். ஆனால் நான் 10 முறையாவது ராகுல்காந்தியையும், பிரியங்காவையும் பார்த்திருப்பேன், ஆனால் அவர்கள் இந்த சந்திப்புகள் குறித்து ஒருமுறை கூட ஊடகங்களிடம் வாய் திறக்கவே இல்லை.

 பெருமையாக நினைக்கிறேன்

பெருமையாக நினைக்கிறேன்

மக்கள் நம்பிக்கையான தலைவரைத் தான் விரும்புகிறார்கள். மற்ற கட்சியினருக்கு நல்ல காலத்திலும் சரி கஷ்டமான காலத்திலம் சரி கைகொடுத்து உதவக் கூடியவர் ராகுல் காந்தி. அவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது மிகச்சரியான முடிவு. மேலும் அவருடைய தலைமையின் கீழ் செயல்பட நான் பெருமையாக கருதகிறேன் என்றும் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+