தாய், மனைவியை சுட்டு கொன்றுவிட்டு இந்திய கடற்படை மாலுமி தற்கொலை!
ஜெய்ப்பூர்: கடற்படை மாலுமி ஒருவர் தனது தாய் மற்றும் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்துள்ளது.
அம்மாநிலத்தின் பாரத்பூர் மாவட்டம் சேவார் பகுதியில் வசித்து வந்த கடற்படை மாலுமி நவநீத் ( 26). நேற்று இரவு வீட்டின் ஒரு படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த தன் தாயை கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நவநீத் அதன்பிறகு தனது மனைவியையும் சுட்டுக்கொன்றுள்ளார். பிறகு தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இன்று காலையில்தான் போலீசாருக்கு தெரியவந்தது.
தற்கொலை செய்வதற்கு முன்னர், நவநீத் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். ஆனால், அதில் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி வாங்கியிருப்பதையும், உயர் அதிகாரியின் தொலைபேசி எண்ணையுமே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நவநீத். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை இதன் பின்னணியில் இருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications