மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பு: பாக். பிரதமர் அலுவலகம்
டெல்லி: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பார் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் நாளை மறுநாள் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த விழாவுக்கு சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

7 நாடுகளின் தலைவர்கள் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்தனர் .ஆனால் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எந்த முடிவையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்பதை அந்நாட்டு ராணுவம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் பங்கேற்றால் மதவாத சக்திகள் ஆத்திரமடைவார்கள் என்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கூறி வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி, மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications