என் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வரட்டும் ஷெரீப்.. ராணுவ வீரரின் மனைவி கொதிப்பு
ஆக்ரா: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துண்டித்து எடுத்துச் சென்ற எனது கணவரின் தலையுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வரட்டும் என்று பாகிஸ்தான் வீரர்களால் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் ஹேம்ராஜின் மனைவி தர்மதாவதி கொதிப்புடன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்களால் தாக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ். இது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஹேம்ராஜின் சொந்த ஊர் உ.பி. மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிராஜ் ஆகும். அப்பகுதி மக்கள் தற்போது மோடி பதவியேற்புக்கு நவாஸ் ஷெரீப் அழைக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தர்மாவதி கருத்து தெரிவிக்கையிபல், ஆட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இரு நாட்டு உறவுகளைப் பேணுவது குறித்து எனக்குக் கவலை இல்லை.
எனது ஒரே கோரிக்கை.. இந்திய மண்ணில் நவாஸ் ஷெரீப் காலடி எடுத்து வைக்கும்போது எனது கணவரின் துண்டிக்கப்பட தலையுடன் காலெடுத்து வைக்கட்டும்.
மோடி இந்த சம்பவத்திற்கு கடந்த ஆண்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நானும் எனது குடும்பத்தினரும் பாஜகவுக்கு ஆதரவாக மாறியிருந்தோம். ஆனால் இப்போது வேதனைப்படுகிறோம் என்றார் தர்மாவதி.












Click it and Unblock the Notifications