இயக்கம் மீது வெறுப்படைந்து சரணடைந்த மாவோயிஸ்ட் தலைவர்: ஆந்திர டிஜிபி
ஹைதராபாத்: மாவோயிஸ்ட் தலைவர் தனது மனைவியுடன் ஆந்திர போலீசார் முன்பு சரண் அடைந்தார். அவர் மாவோயிஸ்ட் இயக்கம் மீது வெறுப்பு கொண்டதால் தான் சரண் அடைந்ததாக டிஜிபி பிரசாத் ராவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் ஜிவிகே பிரசாத் என்ற குட்சா உசென்டி(45). அவரது மனைவி சந்தோஷி மர்கம் என்ற ஜைனி. உசென்டி தலைக்கு போலீசார் ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தனர். இந்நிலையில் உசென்டி தனது மனைவியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீசார் முன்பு சரண் அடைந்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் இன்று நடந்த பத்திர்க்கையாளர் சந்திப்புக்கு அழைத்து வந்தார் ஆந்திர மாநில டிஜிபி பி பிரசாத ராவ்.

அப்போது ராவ் கூறுகையில்,
உசென்டிக்கு மாவோயிஸ்ட் அமைப்பின் கொள்கைகள் பிடிக்கவில்லை. அதனால் தான் அந்த இயக்கம் மீது வெறுப்படைந்து போலீசில் சரண் அடைந்துவிட்டார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதும் சரணடைய ஒரு காரணம். அவர் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தொகை உசென்டிக்கே வழங்கப்படும்.

அவர் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவரை அந்த 3 மாநில போலீசாரிடமும் ஒப்படைப்போம் என்றார்.
ஆந்திர மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்த உசென்டி கடந்த 28 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்துள்ளார். மாவோயிஸ்டுகள் பள்ளிகளை தகர்ப்பது, சாலைகளை சேதப்படுத்துவது மற்றும் அப்பாவி மக்களை போலீஸ் உளவாளிகள் என்று கூறி கொல்வது உசென்டிக்கு சற்றும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications