சத்தீஸ்கரில் பாதுபாப்பு படையை குறிவைத்து நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! 9 வீரர்கள் வீரமரணம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் மாவட்டத்தில் ரிசர்வ் காவலர் படை வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நக்சல்கள் ஐஇடி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 8 வீரர்கள் மற்றும் டிரைவர் என 9 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
இந்தியாவில் நக்சலைட்கள் பிரச்சினை பல காலமாகவே தொடர்கிறது. நக்சலைட்களை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேநேரம் நமது பாதுகாப்புப் படையைக் குறிவைத்தும் நக்சலைட்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது சத்தீஸ்கரில் நடந்துள்ளது.
ஐஇடி தாக்குதல்:
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று இந்த கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. அங்கு மாவட்ட ரிசர்வ் காவலர் படை (டிஆர்ஜி) வீரர்கள் சென்ற வாகனத்தை நக்சல்கள் ஐஇடி வெடிகுண்டு பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளனர்.. பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பெத்ரே-குத்ரு என்ற சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 8 பேர், வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு அதிரடி ஆப்ரேஷனை முடித்துக் கொண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த அனைவரும் டிஆர்ஜி எனப்படும் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்கள் ஆகும். இது அம்மாநில காவல்துறையின் ஒரு பிரிவாகும்.
அதிகாரிகள் சொல்வது என்ன:
இத தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) பஸ்தர் கூறுகையில், "தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் ஆகிய பகுதிகளின் கூட்டு ஆப்ரேஷன்களை முடித்துக் கொண்டு தங்கள் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அடையாளம் தெரியாத மாவோயிஸ்டுகள் பிஜாப்பூர் மாவட்டத்தின் குத்ரு காவல் நிலையப் பகுதியில் ஐஇடியை வெடிக்கச் செய்தனர். விரைவில் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களைப் பகிர்வோம்" என்றார்.
சத்தீஸ்கர் சபாநாயகர்:
இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர் டாக்டர் ராமன் சிங் கூறுகையில், "நக்சலைட்டுகளுக்கு எதிராக முக்கியமான ஆப்ரேஷன்களை நடத்தும் போதெல்லாம்.. இந்த நக்சலைட்டுகள் கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் இதனால் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்படாது. தொடர்ந்து சத்தீஸ்கர் அரசும் மத்திய அரசும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும்" என்றார்.
பின்னணி
சத்தீஸ்கரின் பஸ்தாரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 நக்சலைட்டுகள் நேற்றைய தினம் தான் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்த மறுநாளே இந்த கொடூரம் நடந்துள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை மாலை (ஜனவரி 4) நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் அங்குப் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications