குஜராத் கடலில் 760 கிலோ கஞ்சா, ஹெராயின் பறிமுதல்.. சந்தை மதிப்பு ரூ 2000 கோடி!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடுக்கடலில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருட்களை போதை தடுப்பு பிரிவினரும், இந்திய கடற்படையினரும் பறிமுதல் செய்தனர்.
குஜராத் கடற்கரையில் ஒரு கப்பலில் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை அண்டை நாடுகளிலிருந்து கடத்தி கொண்டு போர்பந்தர் துறைமுகத்திற்கு கொண்டு வருவதாக உளவுத்துறை சார்பில் தகவல் கிடைத்தது. இதன் பேரில் போதை பொருள் தடுப்பு பிரிவினரும் கடற்படை அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த கப்பலில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 529 கிலோ கஞ்சாவும், 234 கிலோ கிரிஸ்டல் மெதாம்பேட்டாமைன், ஹெராயின் ஆகியவை இருந்தது.
இவை மொத்தம் 760 கிலோ இருந்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ 2000 கோடி ஆகும். இது மிகவும் உயர்ந்த தரமானது. இவற்றை அண்டைய நாடுகளில் இருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பல் கடத்தி வந்து இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு சப்ளை செய்கின்றன.
இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இது பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. போதை தடுப்பு பிரிவும் இந்திய கடற்படையினரும் இணைந்து நடுக்கடலில் 700 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தது இதுவே முதல்முறை. இதுவே அதிக அளவும் ஆகும். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்களை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications