28 கட்சிகளுடன் மெகா கூட்டணியாக வலம் வரும் பாரதிய ஜனதா
டெல்லி: லோக்சபா தேர்தலில் 28 கட்சிகளை இணைத்துக் கொண்டு மெகா கூட்டணியாக வலம் வருகிறது பாரதிய ஜனதா.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதால் அதன் கூட்டணியில் பல ஆண்டுகாலம் நீடித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் விலகியது. அப்போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என பல கட்சிகள் இணைந்துள்ளன. அதன் கூட்டணி கட்சிகளின் பலம் 28 ஆக உயர்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 543 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 415 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
சிரோமணி அகாலிதளம், சிவசேனா, தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி, ஆர்.பி.ஐ, லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரிய லோக் சமந்தா கட்சி, மதிமுக, பா.ம.க, தேமுதிக, கொங்கு தே.ம.க., ஐ.ஜே.கே., ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஸ் (மகாராஷ்டிரா), சுவாபிமன் பக்ஸ் (மகாராஷ்டிரா) அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், ஜன சேனா கட்சி, ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ், அப்னா தளம், தேசிய மக்கள் கட்சி (மேகாலயா), நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி (மிசோரம்), கூர்க்கா ஜன் முக்தி மோர்சா, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, புதிய நீதிக்கட்சி, வடகிழக்கு மண்டல அரசியல் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவைதான் பாஜகவின் பங்காளி கட்சிகள்!
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications