சட்டீஸ்கர், குஜராத்தில் பாஜக ‘கை’ மேலோங்கியுள்ளது: என்.டி.டி.வி கருத்துக் கணிப்பு
டெல்லி: 16வது லோக்சபா தேர்தலில் சட்டீஸ்கர் மற்றும் குஜராத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக என்.டி.டி.வி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நடைபெற உள்ள 16வது லோக்சபா தேர்தலில் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு அதிக வெற்றிவாய்ப்புள்ளது என்பது குறித்து என்.டி.டி.வி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களான சட்டீஸ்கர் மற்றும் குஜராத்தில் பாஜகவின் கை மேலோங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இது தொடர்பாக அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

11ல் 9 தொகுதிகள்...
சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளை பா.ஜ., 9, காங்கிரஸ் 2 என பிரித்துக்கொள்ளுமாம்.

ராமன் சிங் தான் பெஸ்ட்...
மேலும், சட்டீஸ்கர் மக்களில் 70 சதவீதம் பேர் மோடியை விட அம்மாநில முதல்வர் ராமன் சிங் மிகச் சிறந்த தலைவர் எனத் தெரிவித்துள்ளனர்.

குஜராத்திலும் பாஜக....
மோடியின் மாநிலமான குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 23யை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மீதமுள்ள 3 தொகுதிகள் காங்கிரஸ் வசமாகும் என அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முதல்வர் ஆனந்த்பென்...
அதேபோல், லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று அதன் பிரதமர் வேட்பாளர் மோடி பிரதமரானால், குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் யார் வரலாம் என்ற கேள்விக்கு 54 சதவீதம் பேர் ஆனந்த்பென் பெயரை முன்மொழிந்துள்ளனர்.

அடுத்த இடத்தில் அமித் ஷா....
அதற்கு அடுத்த இடத்தில் அமீத் ஷா 24 சதவீத ஆதரவையும், நிதின் படேல் 12 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளார்.

4வது இடத்தில் சவுரவ்...
அடுத்த குஜராத் முதல்வருக்கான கருத்துக்கணிப்புக் கேள்வியில் 10 சதவீத ஆதரவுடன் சவுரவ் படேல் நான்காவது இடத்தில் உள்ளார்.

67% மக்கள் எதிர்ப்பு...
67 சதவீத குஜராத் மக்கள் லோக்சபா தேர்தலில் மோடி உத்திரப்பிரதேசத் தொகுதியில் போட்டியிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

62 % மக்கள் ஆதரவு...
ஆனால், உத்திரப்பிரதேசத்தில் 62 சதவீதம் பேர் மோடி அங்கு போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக










Click it and Unblock the Notifications