பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு படுதோல்வி- உ.பி.யில் பாஜகவுக்கு 51 இடங்கள்: என்.டி.டி.வி.
டெல்லி: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு. மேலும் உத்தரப்பிரதேசத்தில் 51 இடங்களை பாஜக கைப்பற்றும் என்கிறது அக்கணிப்பு.
லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகளை என்.டி.டி.வி. நேற்று இரவு வெளியிட்டது. தேசிய அளவில் பாஜக அணியே ஆட்சி அமைக்கும் என்கிறது அக்கணிப்பு. தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறுகிறது அது.
நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கணிப்பு

உ.பி.யில் பாஜக அமோகம்
80 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 51 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும். சமாஜ்வாடி கட்சிக்கு 14, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10, காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் கிடைக்கும்.

பீகாரில் நிதிஷூக்கு செம அடி
40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் பாஜக-24; ராஷ்டிரிய ஜனதா தளம் -12; ஐக்கிய ஜனதா தளத்துக்கு 4 இடங்கள் கிடைக்குமாம். கடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

மத்திய பிரதேசத்தில் பாஜக
மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகள் உள்ளன. இங்கு 26-ல் பாஜக ; காங்கிரஸ் 3 இடங்களில் வெல்லும்.

குஜராத்திலும் பாஜக
26 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் பாஜக 22 தொகுதிகளையும் காங்கிரஸ் 4-ல் மட்டும் வெல்லும்.

ராஜஸ்தானில் பாஜக ஸ்வீப்
25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 21 தொகுதிகளை பாஜக கைப்பற்றிவிடுமாம். காங்கிரஸ் கட்சிக்கு 3தான் கிடைக்குமாம்.

பஞ்சாபில் பலே போட்டி
13 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாஜக அணிக்கு 7 தொகுதிகளும் காங்கிரஸூக்கு 6 இடங்களும் கிடைக்குமாம்.

ஹரியானாவில் பாஜக ஸ்வீப்
10 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் 6 இடங்களை பாஜக கைப்பற்ற, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் கிடைக்கும்.

டெல்லியில் காங்கிரஸுக்கு முட்டை
7 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் பாஜக 6, ஆம் ஆத்மி 1 இடத்தில் வெல்லும். காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications