கர்நாடகாவை கைப்பற்றும் பாஜக… மேற்குவங்கத்தில் மம்தாவுக்கே வெற்றி: என்.டி.டி.வி
கொல்கத்தா: கர்நாடகாவில் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றும் என்று என்.டி.டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று என்.டி.டி.வி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், மக்கள் மன நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் புதிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகார், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, டெல்லி ஆகிய 12 மாநிலங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 20 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 6 இடங்களும், மூன்றாவது அணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மமதாவிற்கு வெற்றி
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.
அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 32 தொகுதிகளில் மம்தா பானர்ஜி கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு இடமில்லை
அதேசமயம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று அந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், மூன்றாவது அணி அதாவது கம்யூனிஸ்ட்களுக்கு 9 இடமும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது அந்த கருத்துக்கணிப்பு.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்











Click it and Unblock the Notifications