‘ப்ளீஸ், என்னைக் கொன்னுடாதீங்க’... மஸ்தான் வலி ஆட்களிடம் கெஞ்சும் நீத்து அகர்வால்!
ஹைதராபாத் : செம்மரக் கடத்தலுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமில்லை என்றும், மஸ்தான் வலியின் ஆட்கள் தன்னைக் கொல்லப் பார்ப்பதாகவும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார் நடிகை நீத்து அகர்வால்.
செம்மரக்கடத்தல் வழக்கில் தெலுங்குப்பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி கைது செய்யப்பட்டார். பின்னர் அவருடன் தனிக்குடித்தனம் நடத்திய நடிகை நீத்து அகர்வாலையும் போலீசார் கைது செய்தனர். நீத்து அகர்வாலின் வங்கிக் கணக்கு மூலம் பணப்பரிமாற்றம் நடந்ததைப் போலீசார் கண்டு பிடித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் நீத்து அகர்வால்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

காதல் பயணம்...
ராஜஸ்தானை சேர்ந்த நான் ஹைதராபாத் வந்து தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தேன். இந்த நிலையில் மஸ்தான்வலி பிரமா பிரயாணம் (காதல் பயணம்) என்ற பெயரில் தெலுங்கு படம் தயாரித்தார்.

நாயகி ஆனேன்...
அந்த படத்துக்கு பல நடிகைகளை ஸ்கீரீன் டெஸ்ட் எடுத்தார். அதில் யாரும் பொருந்தவில்லை. இறுதியில் எனக்கு ஸ்கீரீன் டெஸ்ட் எடுத்த போது எனக்கு பொருந்தியது. இதனால் அவரது படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன்.

காதல்...
படப்பிடிப்பின் போது அவர் என்னை அன்பாக கவனித்துக் கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. மஸ்தான்வலியும் நானும் நெருங்கி பழகினோம். இந்த காதல் எங்கள் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் என்னிடம் நமது குடும்பத்துக்கு காதல் சரிப்பட்டு வராது. எனவே மஸ்தான்வலியுடன் பழகுவதை நிறுத்திக்கொள் என்றனர்.

தனிக்குடித்தனம்...
மஸ்தான் வலியை என்னால் மறக்க முடியவில்லை. இதையடுத்து நானும் மஸ்தான்வலியும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தினோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் யாரும் வரவில்லை.

வாழ்க்கை நாசமானது...
மஸ்தான் வலியை திருமணம் செய்தவுடன் என்னிடம் என் பெற்றோர் நீ சரியான கணவனை தேர்வு செய்யவில்லை. உனது வாழ்க்கை நாசமாகி விடும் என்றனர். அதன்படியே எனது வாழ்க்கை நாசமாகி விட்டது.

எனக்குத் தெரியாது...
மஸ்தான் வலி பட தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் அதிபர் என்ற முறையில் தான் எனக்கு தெரியும். அவருடன் நான் குடும்பம் நடத்திய போது கூட அவர் செம்மர கடத்தலில் ஈடுபட்டவர் என்பது எனக்கு தெரியவில்லை.

சித்ரவதை...
மஸ்தான்வலி எனக்கு பணம் ஏதும் தரவில்லை. நான் படங்களில் நடித்து உழைத்த பணத்தில் தான் ஹைதராபாத்தில் வீடு வாங்கினேன். திருமணத்துக்கு பிறகு மஸ்தான் வலி என்னை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்தார்.

செம்மரக்கடத்தலில் சம்பந்தமில்லை...
நான் அவருடைய மனைவி என்ற வகையில் செம்மர கடத்தலில் சிக்கிய அவர் என்னை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவர்தான் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் போலீசார் என்னை கைது செய்தனர். ஆனால் எனக்கும் செம்மர கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தற்கொலை எண்ணம்...
நான் இப்போது உயிருடன் இருப்பதே என்னை குற்றமற்றவள் என்று நிரூபிக்கத்தான் இல்லாவிட்டால் இந்த பிரச்சினை தொடர்பாக என்றோ நான் என் உயிரை விட்டிருப்பேன். நான் உயிரை விட்டிருந்தால் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க முடியாது.

மீடியா தான் ஆதரவு...
எல்லோருமே எனக்கு எதிராக உள்ளனர். மீடியா மட்டும்தான் எனக்கு ஆதரவாக உள்ளது.

கொள்ளைக்காரி...
வெளி உலகினர் என்னை கொள்ளைக்காரி போல பார்க்கிறார்கள். நான் தாங்க முடியாத அவமானங்களை சந்தித்து விட்டேன். மஸ்தான்வலி நீ உண்மையை சொன்னால்தான் என்னால் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்.

கொல்ல முயற்சி...
மஸ்தான்வலியின் ஆட்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அடிக்கடி மிரட்டவும் செய்கிறார்கள். எனக்கு சாவதை பற்றி பயமில்லை. ஆனால் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குள் என்னை கொலை செய்து விடாதீர்கள். நான் குற்றமற்றவள் என்பதை நிரூபித்த பிறகு என்னை கொலை செய்தாலும் எனக்கு கவலை இல்லை.

கோரிக்கை...
மஸ்தான்வலி ஜெயிலில் இருப்பதால் என்னால் அவரிடம் பேச முடியவில்லை. மஸ்தான் வலிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆட்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் மனது வைத்தால் தான் என்னை காப்பாற்ற முடியும்.

நான் குற்றமற்றவள்...
நான் குற்றமற்றவள், நிரபராதி என்பதை நீங்கள் கூறுங்கள். அதன் மூலம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பேன். அதன் பிறகு என்னை கொலை செய்தாலும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வேன்' என இவ்வாறு நீத்து அகர்வால் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் பேட்டி...
இந்தப் பேட்டியின் போது பல இடங்களில் பேச முடியாமல் நீத்து அகர்வால் கண்ணீர் விட்டு கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications