ஒரே நொடியில் பயங்கரம்.. நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 1,000 பேர்! திடீர் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தின் திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை சுமார் 9 மணியளவில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் கிராமங்கள் மற்றும் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதிகள் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் இமயமலை அடியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு எளிதாக வெள்ளப்பெருக்கு, பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Nepal Flood

நேபாள வெள்ளம்

நேபாளத்தின் திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா மாவட்டத்தில் திடீரென இன்று காலை வெள்ளம் தாக்கியுள்ளது.. காலை சுமார் 9 மணியளவில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சுமார் 1,000 பேர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் சேதத்தின் முழுமையான விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

மிக மோசமான பாதிப்பு

நேபாளத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சியாப்ருபேசி மற்றும் திமுரே பகுதிகள் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத் எல்லையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கிராமங்கள் மற்றும் மற்றும் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதிகள் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

போட்டே கோசி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை

திபெத் பகுதியில் உருவாகும் போட்டே கோசி ஆற்றில் நீர்மட்டம் திடீரென மிக பெரிய அளவில் உயர்ந்ததே இந்த திடீர் வெள்ளத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திரிசூலி ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள நுவாகோட், தாதிங், சித்வான் மற்றும் கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியிலும் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மலை பகுதிகள் என்பதால் மீட்பு பணிகள் சவாலாக இருக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளும் நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

அவசர ஆலோசனை

நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் பலேன் ஷா தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்வதுடன், நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமரின் ஆலோசகர் அசிம் ஷா கூறுகையில், "பாதிக்கப்பட்ட பகுதிகளின் மாவட்ட தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் நேரடியாக தொடர்பில் உள்ளனர். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+