கொல்கத்தாவில் பயங்கரம்: ஓடும் காரில் இளம்பெண் 4 பேரால் பலாத்காரம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேபாளத்தை சேர்ந்த 24 வயது பெண் 4 பேரால் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தை சேர்ந்த 24 வயது பெண் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு நண்பர் ஒருவரை சந்திக்க டாக்சியில் காபி கடைக்கு சென்றுள்ளார்.

தவறான இடத்திற்கு சென்றுவிட்டதை உணர்ந்த அவர் செக்டர் 5ல் இறங்கிவிட்டார். வழி தெரியாமல் குழம்பிய அவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் வழி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரோ தனக்கு வழி தெரியாது என்று கூறி தனது நண்பர்களுக்கு போன் செய்துள்ளார்.
உடனே ஒரு எஸ்.யு.வி. காரில் அந்த வாலிபரின் நண்பர்கள் 3 பேர் வர அவர்கள் நாங்கள் உங்களை அந்த காபி கடைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பி காரில் ஏறிய அந்த பெண்ணை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து அதிகாலை 3 மணி அளவில் சாலையோரம் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த அந்த பெண்ணை ரோந்து வந்த போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரை தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications