கல்லூரி பேராசிரியர் பதவிக்கான நெட் தேர்வு- தமிழகத்தில் மட்டும் 50,000 பேர் பங்கேற்பு
சென்னை: நாடு முழுவதும் கல்லூரி பேராசிரியர் பதவிக்கான நெட் தகுதி தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக சேர முடியும். இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான, 2-வது 'நெட்' தேர்வு, இன்று நடைபெற்றது.

நாடு முழுவதும், 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், 10 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ளிட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.
இன்று நடைபெற்ற நெட் தேர்வில் 3 தாள்களுக்கு விடையளிக்கப்பட்டது. இந்தத் தேர்வானது காலை 9.30 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
முதல் தாள் 100 மதிப்பெண் கொண்டது. 60 கேள்விகள் அடங்கிய முதல் தாளுக்கு, 75 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில், 50 கேள்விகளுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். இரண்டாவது தாளுக்கும், 100 மதிப்பெண் அதில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மூன்றாவது தாளுக்கு 150 மதிப்பெண். இதில் 70 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். இந்த தாளுக்கு, இரண்டரை மணி நேரம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications