நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை... 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்தார்?
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ல் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை; 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்திருப்பதற்கான சாத்தியங்களை மேற்கு வங்க அரசு பகிரங்கப்படுத்தியுள்ள ஆவணங்கள் உறுதி செய்வதாக கூறப்படுகிறது.
நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. ஆனால் தடாலடியாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று நேதாஜி தொடர்பான 12,744 பக்கங்களைக் கொண்ட 64 ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.

கொல்கத்தா போலீஸ் கமிஷன்ர் சுராஜித் கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து, போலீஸ் மியூசியத்தில் பொதுமக்களின் பார்வைக்காக நேதாஜி தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆவணங்களின் சிடி, நேதாஜியின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு இன்று பகிரங்கப்படுத்தியிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்துள்ளார் என நம்பப்படுகிறது.
1945ஆம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை; அதன் பின்னர் 19 ஆண்டுகள் கழித்து 1964ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக இந்தியாவுக்கு திரும்பியதாக 1960ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் உளவு அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்ததாக நம்பப்படுகிறது. அதேபோல் 1941ஆம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சீக்கியர் வேடத்தில் அந்த காவலில் இருந்து தப்பியதாகவும் சில ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications