யுவராஜ் சிங் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம்.. உருகும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது ஓய்வை அறிவித்தார்.
மேலும் கிரிக்கெட் தனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளதாகவும் போராட கற்றுக்கொடுத்ததாகவும் உருக்கமாக கூறினார். யுவராஜின் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுவராஜ் குறித்து அவரது ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முதலில் நினைவுக்கு வருவது
2007ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் போது, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடின் ஒரு ஓவரின் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடித்து 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய யுவராஜ் சிங்கின் சாதனைதான் முதலில் நினைவுக்கு வருவதாக அவரது ரசிகர்கள் டிவிட்டரில் உருகியுள்ளனர்.
|
இந்திய அணியில் கிடைப்பது வரம்
யுவராஜ் சிங் மாதிரி ஒரு வீரர் இனி இந்திய அணியில் கிடைப்பது வரம்.
|
இந்த போராளி..!
#விடைபெற்றார்
#இந்த போராளி..!
#யுவராஜ்சிங்_ஓய்வு..!
|
ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது
சொன்னதை போலவே, சாதித்தார் யுவராஜ் சிங். சச்சின் அவுட்டானதும் களம் வந்தார் #YuvrajSingh முதல் பந்தே அக்தரிடமிருந்து 155 கிமீ வேக யார்க்கர். அந்த பந்தை லெக் திசையில் சூப்பராக பவுண்டரியாக மாற்றினார் யுவராஜ். அதிரடி தொடர்ந்தது. ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது, வென்றது
|
ஒத்த சாதனைதான்
யுவராஜ்சிங்ன்னா டக்குன்னு எல்லோருக்கும் ஞாபகம் வர்ற ஒரே விஷயம் உலகத்துல எந்த ஒரு பேட்ஸ்மேனும் உலகத்தர மேட்ச்சுல அடிக்க முடியாத அந்த ஒத்த சாதனை தான்..
|
2 பேரொட பீல்டிங்
யுவராஜ்சிங் & கைஃப் இவங்க ரெண்டுபேரோட பீல்டிங்
|
புதிய தலைமுறை கிரிக்கெட்டர்
யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்லே இருந்து ஓய்வு பெறுகிறார். எத்தனையோ கிரிக்கெட்டர்களை பார்த்திருந்தாலும், நான் கண்ட முதல் புதிய தலைமுறை கிரிக்கெட்டர் என யுவராஜ் சிங்கைதான் சொல்வேன். அந்த ஆட்டியூடே அப்போதைக்கு புத்தம் புதுசு. அவரோட இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துவோம்
|
மகிழ்ச்சிகளை கொடுக்கட்டும்
யுவராஜ் சிங். நான் பார்த்த பியூர் கிரிக்கெட்டர். தி லெஜெண்ட். கிரிக்கெட் பல சோகங்களை கொடுத்துவிட்டது. இனி வாழ்க்கை பல மகிழ்ச்சிகளை கொடுக்கட்டும். நீங்கள் செய்த சாதனைகளை அவ்வளவு எளிதில் மறக்க இயலாது ஒரு கிரிக்கெட் ரசிகரால்.. வாழ்த்துக்கள் யுவி
|
என்றும் ரியல் ஹீரோ
நீங்கள் ஓய்வு பெற்றாலும் மக்கள் மனதில் என்றும் ரியல் ஹீரோ யுவராஜ் சிங்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications