ஜெய்ஷாவை நிதி அமைச்சராக்கினால் இந்திய பொருளாதாரம் 16000 மடங்கு உயரும்.. நெட்டிசன்கள் கேலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷா மீது மோசடி புகாரை வெப்சைட் ஒன்று வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இதுகுறித்து அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்டு வருகிறது.

16000 மடங்கு அதிகமாக திடீரென ஜெய்ஷா நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக வெப்சைட் செய்தி ஆதாரத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் கேலி, கிண்டல்களை ஆரம்பித்துள்ளனர்.

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம்

ஒவ்வொருவர் வங்கி கணக்கிற்கும் ரூ.15 லட்சம் வரும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த பணம்தான், ஜெய்ஷா வங்கி கணக்கிற்கு போய்விட்டது போலும் என்கிறார் இந்த நெட்டிசன்.

பொருளாதாரம் உயரும்

நரேந்திர மோடி ஜெய்ஷாவை நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும். பொருளாதாரம், 16000% வளரும் (காங். குற்றச்சாட்டுபடி 16000 மடங்கு) என்று இந்த நெட்டிசன் தெரிவிக்கிறார்.

கோயில் கட்ட ஆர்வம்

அமித்ஷா மகன் ஜெய் ஷா நடத்தி வந்த நிறுவனத்தின் பெயர் டெம்பிள் என்டர்பிரைசஸ். கோயில் கட்டுவோம் என்று பாஜக கூறுவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என்று கூறுகிறது இந்த டிவிட்.

திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நாகர்கோவிலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amit Shah’s son, Jay Amit Shah’s company name is Temple Enterprise. Now u know what BJP meant by “Mandir Banayenge” says Netizens.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற