இந்தியாவுக்குப் போக வேண்டாம் என நாங்கள் கூறவே இல்லை.. ரஷ்யா மறுப்பு
பனாஜி: இந்தியா சுற்றுலா செல்வதற்குப் பாதுகாப்பு இல்லாத நாடு என்று நாங்கள் ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று ரஷ்ய நாட்டவருக்கு நாங்கள் அறிவுறுத்தவும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.
சுற்றுலா செல்வதற்குப் பாதுகாப்பான பகுதிகள் என்ற பட்டியலிலிருந்து இந்தியாவின் பெயரையும், அதேபோல கோவா மாநிலத்தின் பெயரையும் ரஷ்யா நீக்கியதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை தற்போது ரஷ்யா மறுத்துள்ளது.

இதுதொடர்பாக தாங்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கோவாவில் உள்ள ரஷ்ய செய்தி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பனாஜியில் உள்ள ரஷ்ய செய்தி மையத்தின் தலைரான எகதரீனா பெலியகோவா விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவை பாதுகாப்பான நாடுகள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக எந்தத் தகவலையும் ரஷ்யா வெளியிடவில்லை. மேலும் இந்தியாவை பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கவில்லை. அதுபோல வெளியான செய்தி தவறு என்று அவர் கூறியுள்ளார்.
கோவாவில் உள்ள ரஷ்ய செய்தி மையமானது, ஆயிரக்கணக்கான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல் மையமாக விளங்கி வருகிறது. கோவாவுக்கு ஆண்டுதோறும் வருகை தரும் ரஷ்யர்களுக்கு இது உதவி வருகிறது.
முன்னதாக கோவா மாநிலத்தை கருப்புப் பட்டியலில் ரஷ்யாவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கோவா மையம் தற்போது இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது.
கோவாவுக்கு ஆண்டுதோறும் 3 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்ககளில் ரஷ்யர்கள் எண்ணிக்கை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது இடத்தில் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.
இருப்பினும் ரஷ்யாவில் தற்போது பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டிருப்பதாலும் சிரியப் போரில் ரஷ்யா இறங்கியிருப்பதாலும், இந்த ஆண்டு ரஷ்யர்கள் வருகையில் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவை, குறிப்பாக கோவாவை கருப்புப் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளதாக செய்தி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications