புது ரூ2,000, நோட்டு வெச்சிருக்கீங்களா? உங்ககிட்ட மோடியே பேசும் ஆப் ரிலீஸ்... 'அவ்ளோ' பாதுகாப்பு!
புதிய ரூ2,000 நோட்டுகள் மூலம் மோடியின் பேச்சை கேட்கும் ஆப் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
டெல்லி: புதிய ரூ2,000 அல்லது ரூ5,00 நோட்டை ஸ்கேன் செய்தால் பிரதமர் மோடியின் உரை இடம்பெறக் கூடிய வகையில் வடிமைக்கப்பட்ட ஒரு ஆப் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இது புதிய ரூபாய் நோட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதியதாக ரூ500, ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதனால் 10 நாட்களுக்கும் மேலாக புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி கிடக்கிறது.

அதே நேரத்தில் புதிய ரூ2,000, 500 நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை கேள்விக்குள்ளாக்கும் வகையில் புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Modi keynote" என்ற ஆப்பை நீங்கள் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இன்ஸ்டால் ஆன பின்னர் Scan 500 or 2000 Rs notes click below என்ற ஆப்சன் வரும்... அப்போது உங்களது ரூ2,000 அல்லது ரூ500 நோட்டை மொபைல் மூலமாக ஸ்கேன் செய்தால், பிரதமர் மோடி கருப்புப் பணம் குறித்து கோவாவில் கண்ணீரும் கம்பலையுமாக ஆற்றிய உரை ஆட்டோமேடிக்காக ஒளிபரப்பும்.

அதே நேரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் எதையும் இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்யவே முடியாது. இந்த ஆப் செயலிழந்து போய்விடும். இந்த ஆப் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் முக்கிய அம்சங்களை உள்வாங்கி இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளதால் அவை பாதுகாப்புக்குரியதுதானா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications