"பீர்" விலை அடிப்படையில்.... “கேளிக்கை” நகரங்களில் டெல்லிக்கு 25வது இடம்!
டெல்லி: உலக அளவில் கேளிக்கைக்கு உகந்த நகரங்களில் டெல்லி 25 ஆவது இடம் பெற்றுள்ளது.
இப்பட்டியலில் முதல் இடத்தை ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் தட்டிச்சென்றுள்ளது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட "கோ யூரோ" நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "உலக அளவில் கேளிக்கைகளுக்கு ஏற்ற நகரம் எது என்பதை கண்டறிய "கெட் யுவர் ஓன் கைட்" மற்றும் "கோ யூரோ" ஆகிய இரு டிராவல் நிறுவனங்களும் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்விற்காக உலகின் 1,800 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், இரவு வாழ்க்கை, பீர் பாட்டில்களின் சராசரி விலை, கேளிக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு வயதுடைய சுற்றுலா பயணிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த ஆய்வில், பார்கள், மியூசியம், உள்ளிட்ட அனைத்து வசதிகளிலும் பெர்லின் நகரம் முதல் இடத்தை பிடித்தது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்தின் லண்டன், பிரான்சின் பாரீஸ், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஜப்பானின் டோக்கியோ நகரங்கள் இடம் பெற்றன.
கேளிக்கைகளுக்கு ஏற்ற முதல் 25 நகரங்களின் பட்டியலில் டெல்லி 25 ஆவது இடத்தை பிடித்துள்ளது .இந்திய நகரங்களில் டெல்லி மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்தது. பராம்பரிய நம்பிக்கைகளை கொண்டிராத நகரங்களில் தாய்லாந்தின் பாங்காக் முதலிடத்திலும், அதற்கு அடுத்ததாக டோக்கியோ நகரமும் இடம் பிடித்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் கோவா, பெங்களூரு, புதுச்சேரி போன்ற மது வாடை கமழும் நகரங்கள் இந்த வரிசையில் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications