For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்னிந்தியாவுக்கும் பரவியது "காவி".. இதுதான் இந்தியாவோட புதிய அரசியல் மேப்!

கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் தென் பகுதியையும் பிடித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக தேர்தல் களத்தில் வென்றது யார், வீழ்ந்தது யார்?- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் தென் பகுதியையும் பிடித்துள்ளது. தற்போது இந்தியாவின் புதிய வரைபடம் எப்படி இருக்கும் என்ற புகைப்படம் வைரலாகி உள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

    இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 111 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.இந்த நிலையில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது.

     வெற்றி வெற்றி

    வெற்றி வெற்றி

    தற்போது கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் மேலும் சில மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதன்பின், நாடாளுமன்ற தேர்தல் வேறு நடக்க இருக்கிறது. இதனால், பாஜக இன்னும் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது. அந்த கட்சியின் அகண்ட பாரத கனவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

     காங்கிரஸ் ஆட்சி

    காங்கிரஸ் ஆட்சி

    தற்போது மொத்தம் மூன்று மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து வருகிறது. பஞ்சாப்பில் நிலையான ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது. மேலும் மேகாலயாவிலும் ஆட்சி செய்து வருகிறது.

     மாநிலங்கள்

    மாநிலங்கள்

    காங்கிரஸ் இல்லாத மாநில கட்சிகள் என்று பார்த்தால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் மாநில கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகாவை தவிர்த்து மீதமுள்ள 20 மாநிலங்களில் பாஜகதான் ஆட்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேப்

    தற்போது இந்தியாவின் புதிய மேப் என்று இணையத்தில் நிறைய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் எவ்வளவு இடம், பாஜக எவ்வளவு இடம், மாநில கட்சிகள் எவ்வளவு இடத்தை பிடித்துள்ளது என்று இதில் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    New Political Map released as BJP gets most part of the India and after BJP's mass victory in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X