ஆபரேஷனும் இல்லை... மிஷனும் இல்லை... மணிப்பூர் பாணியைக் கையாள பாஜக திட்டம்!
Recommended Video

டெல்லி: கர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவின் எடியூரப்பாவுக்கு இன்னும் 24 மணி நேரம்தான் இருக்கிறது. இந்த நிலையில் பாஜக எப்படி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கர்நாடகா சட்டசபையில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றது.
பெரும்பான்மையை நிரூபிக்க 112 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், நாளை மாலை 4 மணிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டும்.
மணிப்பூரில் கடந்தாண்டு இதேபோன்ற நிலைதான் இருந்தது. கடந்தாண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்றது. 21 தொகுதிகளில் வென்ற பாஜக, நாகா மக்கள் மற்றும் நாகா மக்கள் முன்னணியின் தலா 4 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை என 30 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால பெரும்பான்மைக்கு 31 பேரின் ஆதரவு தேவை.

இது ரொம்ப புதுசு
காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்தால், கட்சித் தாவல் தடை சட்டத்தால் சிக்கல் வரும். இந்த நிலையில், சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும் தினத்தன்று, ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ, அந்தக் கட்சியில் இருந்து விலகாமல், பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தார்.

தொடர்ந்தது தாவல்
அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் சபாநாயகரிடம் மனு கொடுத்தது. வழக்கும் நடந்து வருகிறது. இதனிடையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 8 பேர் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.

அரசியலில் புதிய பாணி
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், சட்டசபையில் இவர்கள் ஆளும்கட்சி வரிசையில் அமர மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் வரிசையில்தான் அமருவார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யாமலேயே, பாஜகவுக்கு ஆதரவு என்பது இந்திய அரசியலுக்கே புதிதாக இருந்தது.

கர்நாடகாவில் மணிப்பூர்
கர்நாடகாவில் மிஷன் 150 தோல்வியடைந்தது. அடுத்தது ஆப்பரேஷன் தாமரையை பாஜக நடத்தியது. அதாவது எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது. அதுவும் நடக்கவில்லை. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின்போது பங்கேற்க விடாமல் தடுக்கவும் முயற்சி நடக்கிறது. அல்லது மணிப்பூர் பாணியை பாஜக பயன்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications