சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு 'ஹாயாக' திரும்பும் 2-வது வீடியோ ரிலீஸ்!
பெங்களூரு சிறையைவிட்டு வெளியே சென்று ஷாப்பிங் செய்துவிட்டு சசிகலா திரும்பும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூரு: சிறையில் இருந்து சாதாரண உடையில் சசிகலாவும் இளவரசியும் வெளியே சென்றுவிட்டு திரும்பும் 2-வது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசி இருவரும் சொகுசாக இருப்பதாகவும் தனி ராஜ்யமே நடத்துவதாகவும் சிறை அதிகாரி ரூபா அரசுக்கு அளித்தது பெரும் புயலை கிளப்பியது. அத்துடன் சசிகலாவும் இளவரசியும் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பும் வீடியோவும் வெளியானது.

விசாரணைக்கு உத்தரவு
மேலும் சிறைக்குள் சசிகலா 5 அறைகளை பயன்படுத்தியது; சிறை அதிகாரி அலுவலகத்தில் அமர்ந்து பார்வையாளர்களை சந்திப்பது; பார்வையாளர் நேரத்துக்கு பின்னரும் சசிகலாவை உறவினர்கள் சந்தித்தது என அடுக்கடுக்கான விவகாரங்கள் அம்பலமாகின. இது தொடர்பாக கர்நாடகா அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஆதாரங்களை தாக்கல் செய்த ரூபா
விசாரணை அதிகாரி வினய்குமார் பெங்களூரு சிறையில் ஆய்வு நடத்தினார். இந்த விசாரணையின் ஒருபகுதியாக கடந்த சனிக்கிழமையன்று வினய்குமார் முன்பாக ரூபா ஏராளமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தார்.
புதிய வீடியோ ரிலீஸ்
அதில் புதிய வீடியோக்களும் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோவில் சசிகலாவும் இளவரசியும் சாதாரண உடையில் வெளியே இருந்து பைகளுடன் சிறையின் மெயின் கேட் வழியாக உள்ளே நுழையும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் ஆண் கைதிகள், போலீசாரும் நடமாடுவதும் இடம்பெற்றுள்ளது.

74 ஆதாரங்கள்
இது போல் மொத்தம் 74 ஆதாரங்களை ரூபா தாக்கல் செய்திருக்கிறார். மேலும் பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய வேண்டும் எனவும் ரூபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications