காதல் திருமணம் செய்த மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை

    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புதுமணத் தம்பதியை பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் மாதவி(20). அவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக நவ்தீப்(24) என்ற வாலிபரை இந்த மாதத்தின் துவக்கத்தில் திருமணம் செய்து கொண்டார்.

    Newly married couple stabbed in Hyderabad

    இந்நிலையில் மாதவி மற்றும் அவரின் கணவர் நேற்று கடைத்தெருவுக்கு சென்றனர். அப்போது அங்கு காத்திருந்த மாதவியின் தந்தை மனோகர சாரி தனது மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுக்க வந்தவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டினார். அவர் தாக்கியதில் மாதவியின் முகம், கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. நவ்தீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மனோகர சாரி மீது வழக்கப்பதிவு செய்துள்ளனர். மனோகர சாரி தலைமைறவாக உள்ளார்.

    முன்னதாக தெலுங்கானாவில் வைஷ்யா சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த தலித் வாலிபர் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு இந்த கொடூரம் நடந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+