டெல்லியில் திருமணமான ஒரே மாதத்தில் மாடல் அழகி தூக்கு போட்டு தற்கொலை
டெல்லி: டெல்லியில் திருமணமான ஒரே மாதத்தில் மாடல் அழகி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்திய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியை சேர்ந்தவர் பிரியங்கா கபூர்(25). மாடல் அழகி. அவருக்கும் தொழில் அதிபர் நிதின் சாவ்லாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. நிதின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரியங்காவை சந்தித்தபோது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை பிரியங்காவின் தாயும், நிதினும் அவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. வீடு உட்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரியங்கா தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.
இது குறித்து பிரியங்காவின் சகோதரி டிம்பி கூறுகையில்,
நிதின் வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வந்தார் என்றார்.
பிரியங்காவின் உடலுக்கு அருகில் இருந்த 2 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிதினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications