குஜராத்தில் பாஜக 115 இடங்களை கைப்பற்றும்.. நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு
குஜராத்தில் பாஜக 115 இடங்களை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Recommended Video

மும்பை: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 115 இடங்களை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாடே ஆர்வமுடன் காத்திருக்கும் குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல்கள் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து ஆங்கில தொலைக்காட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இம்முறையாவது ஆட்சியை கைப்பற்ற முடியுமா என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன.

பாஜகவுக்கு வாய்ப்பு
இந்நிலையில் நியூஸ் எக்ஸ் - சிஎன்எக்ஸ் தொலைக்காட்சி தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சி
நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக 115 இடங்களை அள்ளும்
அதாவது குஜராத்தில் பாஜக 115 இடங்களை அள்ளும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ்க்கு 65 இடங்கள்
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதரகட்சிகள் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications