ஜனாதிபதி தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க.. மீரா குமார் வேண்டுகோள்
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் மீரா குமார், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.

போட்டி வேட்பாளர்
பாஜக அறிவித்துள்ள வேட்பாளரை எதிர்த்து முன்னாள் லோக் சபா நாயகர் மீரா குமார் களம் இறக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. வரும் 28ம் தேதி மீரா குமார் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

எம்பி, எம்எல்ஏக்களிடம் ஆதரவு
இந்நிலையில், தனக்கு வாக்களிக்க எம்எல்ஏக்கள் எம்பிக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் மற்றும் ஆதரவு கட்சிகளிடம் ஆதரவு கேட்பது என்றும் முடிவு செய்துள்ளார்.

உருக்கமான வேண்டுகோள்
இதனிடையே அவர் உருக்கமான ஒரு வேண்டுகோளை எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு வைத்தார். அதில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு இறுதியான உரை கல்லாக ஜனாதிபதி அலுவலகத்தை அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது.

மனசாட்சிப்படி..
குறுகிய அரசியல் அரசியல் ஆதாயத்திற்காக ஜனாதிபதி அலுவலகம் செயல்பட முடியாது. ஜனாதிபதி தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் தங்கள் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும் என்று மீரா குமார் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications