வாக்கு எண்ணும் தேதியை மாத்துங்க..தேர்தல் ஆணையத்தை அணுகும் என்ஜிஒக்கள்! மிசோரமில் வலுக்கும் கோரிக்கை
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் வாக்குகளை வேறு நாளில் எண்ண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை அணுக இருப்பதாக மிசோரம் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பு குழு கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதியன்று நடைபெற்றது. இம்மாநிலத்தில் பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் சில ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றன. ஏனெனில் இந்த மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 85 சதவிகிதமாக இருக்கின்றனர்.
எனவே வாக்கு எண்ணிக்கை தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருவதால் அதனை மாற்ற வேண்டும் என ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்), பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தேவாலயம், மாணவர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்புக் குழுக்களும் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பு குழுவானது இதே கோரிக்கையை முன்வைக்கும் அமைப்புகளுடன் சேர்ந்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி வாக்குகள் எண்ணும் தேதியை டிசம்பர் 4 அல்லது 5 என மாற்ற வேண்டும் என்றும், அப்படி மாற்றாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. அதேபோல இந்த கோரிக்கை தொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அதிகாரிகளை அணுக இருப்பதாக கூறியுள்ளது. எனவே வாக்குப்பதிவு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications