ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய இருவர் ஹைதராபாத்தில் கைது
ஹைதராபாத்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய அந்த அமைப்பின் ஹைதராபாத் பிரிவு தலைவர் உள்பட இருவரை தேசிய புலனாய்வு துறையினர் நேற்று கைது செய்தனர். முன்னதாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என கருதப்படும் சிலர் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாகவும், பயங்கர நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு வருவதாகவும் தேசிய புலனாய்வுத் துறைக்கு (என்.ஐ.ஏ) தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கடந்த மாதம் 29-ந்தேதி ஹைதராபாத் பழைய நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் சோதனையில் 11 பேர் சிக்கினர்.

பின்னர் அவர்களில் முகமது இப்ராகிம் யாஷ்தனி என்கிற இப்பு, ஹபீப் முகமது என்கிற சர், முகமது இலியாஸ் யாஷ்தனி, அப்துல்லா பின் அகமது அல் அமூடி, முசாபர் ரிஸ்வான் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
சிரியா, ஈராக் நாடுகளின் ஐ.எஸ். அமைப்பினர் மூலம் இணையதளம் வழியாக வெடிகுண்டு தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டதும், பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரிய வந்தது. பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைதான 5 பேருக்கும் நிதி உதவி அளித்தவர்கள் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வந்த அந்த அமைப்பின் ஹைதராபாத் பிரிவு தலைவர்
யாசிர் நியமத்துல்லா என்பவரையும், அவருக்கு உதவியாக செயல்பட்ட அதாவுல்லா ரெஹ்மான் என்பவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ஹைதராபாத்தில் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications