நாடு முழுவதும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 9 பேர் அதிரடி கைது!
டெல்லி: நாடு முழுவதும் அதிரடியாக ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 9 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்று ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த் என்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் போலீசார், மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் போது னூத்-உல்-கலிபா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஷேக் உள்பட 14 பேர் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும், கூடுதல் விசாரணைக்காக டெல்லிக்கு கொண்டு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், நன்கு திட்டமிட்டு ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த் அமைப்பு உருவாக்கப்படுவது தெரியவந்துள்ளது.
பிடிபட்ட அனைவரும் 18 முதல் 30 வயது வரையுடையவர்கள்; இவர்களில் சிலர் சாப்ட்வேர் என்ஜினியர்கள். ஹவாலா முறை மூலம் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அனுப்பப்பட்டு வந்தது.
மேலும் இவர்கள் அனைவரும் இந்தியன் முஜாஹீதீன் அமைப்பைச் சேர்ந்த சபி ஆர்மருடன் தொடர்பில் இருந்து வந்தனர் என்றும், சபி ஆர்மர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது பிடிபட்ட 19 பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications