Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்தது. பின்னர் நிர்பயாவை ஓடும் பேருந்தில் இருந்து அந்த கும்பல் தூக்கி வெளியே வீசியது.

Nirbhaya's killers will hang to death says Supreme Court

இது தொடர்பாக 18 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டனர். இளம்குற்றவாளி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.

எஞ்சிய 4 பேருக்கும் கீழ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என கூறி 4 பேருக்குமான தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+