நித்தியானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை முடிவு: கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்?
பெங்களூர்: பலாத்கார வழக்கில் சாமியார் நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை முடிவுகளை சிஐடி போலீசார் இன்று கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், கோர்ட் அனுமதியளித்தை தொடர்ந்து நித்தியானந்தா சாமியாரிடம் கடந்த 8ம்தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி போலீசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை
விக்டோரியா மருத்துவமனை தலைவர் துர்க்கண்ணா தலைமையில் 6 பேர் கொண்ட டாக்டர் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது. ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளுக்கு நித்தியானந்தா உள்ளானார்.

ஒத்துழைப்பு தரவில்லை
அதே நேரம் விந்தணு பரிசோதனை போன்றவற்றை செய்ய முயன்றபோது, தனக்கு நெஞ்சுவலி இருப்பதால், சுய இன்பம் செய்தால் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறி டாக்டர்களுக்கு நித்தியானந்தா ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார்.

குரல் சோதனை
இதன்பிறகு மடிவாளா பகுதியிலுள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் அவரது குரல் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை அறிக்கையை சிஐடி போலீசாரிடம் டாக்டர்கள் குழு கடந்த வார இறுதியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆனால் அறிக்கையில் எந்த டாக்டர் கையெழுத்திடுவது என்பதில் ஏற்பட்ட இழுபறியால் அறிக்கையை அளிப்பதிலும் காலதாமதம் ஆனது.

டாக்டர்களுக்குள் சர்ச்சை
சோதனை அறிக்கையில் கையெழுத்திடும் டாக்டர்கள், நித்தியானந்தாவுடனான வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்ற அச்சத்தால் டாக்டர்கள் கையெழுத்திட மறுத்துவந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இறுதியில், துர்க்கண்ணா உட்பட அனைத்து டாக்டர்களும் கையெழுத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இன்று தாக்கல்..
டாக்டர்கள் குழு அளித்துள்ள அறிக்கையை, சிஐடி போலீசார், இன்று ராம்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகுதான், பரிசோதனையில் நடந்த உண்மை விவரங்கள் வெளியேவரும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications