அகந்தை கொண்டவர் நிதிஷ்குமார்: சத்தீஸ்கரில் மோடி தாக்கு
ஜக்தல்பூர்: பீகார் மாநில முதல்வர் நிதீஸ்குமார் அகந்தை கொண்ட முதல்வர் என்று நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் தனது அரசியல் எதிரியான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாகச் சாடினார்.
பழங்குடியின மக்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், சத்தீஸ்கர் மலைவாழ் மக்கள் எந்த முன்னேற்றத்தையும் பெறவில்லை. பாஜகவினால் மட்டுமே இந்த மாநில மக்களை முன்னேற்ற முடியும்.

ராமன்சிங் தலைமையில் சத்தீஸ்கர் மாநிலம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி இல்லை.
பாட்னாவில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை டாக்டர் ராமன்சிங் (சத்தீஷ்கர் முதல்வர்) சந்தித்தார். அரசின் குறைபாடுகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. குண்டுவெடிப்பு பற்றி பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் கேட்டபோது அவரது அகந்தை வெளிப்பட்டது.
இதன்மூலம் பரிதாபம் காட்டும் முதல்வர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையும், அகந்தையுள்ள முதல்வர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும் பார்க்க முடிகிறது இவ்வாறு மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications