பீகார் சட்டசபை தேர்தலில் சாதித்தது "சமூக நீதி" கூட்டணி- அழியவில்லை கூட்டணி சகாப்தம்!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம் மலையேறிவிட்டதாக 'மிதப்பாக' கருத்து தெரிவித்தவர்கள் முகத்தில் கரிபூசப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கூட்டணி ஆட்சி முறையையே ஒழித்துக் கட்டிவிட்டோம் என்று பா.ஜ.க. மார்தட்டியது.

ஆனால் அதே பாரதிய ஜனதா கட்சிதான் மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்த்துக் கொண்டு கூட்டணி அரசை அமைத்தது. மேலும் பீகாரில் பரம வைரிகளாக இருந்த நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் கை கோர்த்தபோது ஏகடியம் பேசியது பா.ஜ.க.
இந்த கூட்டணியே நிலைக்காது என்று முதலில் கிண்டலடித்தது பா.ஜ.க. ஆனால் இடஒதுக்கீடு, மதச்சார்பின்மை போன்ற சமூக நீதி விவகாரங்களில் சற்றும் சமரசம் செய்யாத தலைவர்களாக லாலுவும் நிதிஷ்குமாரும் இருந்ததால் கூட்டணி வலுவாகவே இருந்தது.
தொகுதிப் பங்கீட்டிலாவது இந்த இரு கட்சிகளின் கூட்டணி உடைந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பும் பா.ஜ.க.விடம் இருந்தது. இதனால் பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள், தொகுதிப் பங்கீட்டின் போதே இரு கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டது; கூட்டணி உடைந்தது என்றே செய்திகள் வெளியிட்டன.
ஆனால் எந்த ஒரு பஞ்சாயத்துமே இல்லாமல் 234 தொகுதிகளில் இரு கட்சிகளும் சரி சமமாக 101 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அறிவித்தனர் நிதிஷும் லாலுவும். அதனைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பத்தில் இந்த கூட்டணி இருப்பதாக கிளப்பிவிடப்பட்டது. நிச்சயம் லாலு பிரசாத் யாதவ், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கமாட்டார் என்று பா.ஜ.க.வும் அதன் ஆதரவு குரல்களும் கூறிவந்தன.
இருப்பினும் தெள்ளத் தெளிவாக, எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்றும் எங்கள் குடும்பத்தினர் யாரும் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும் லாலு பிரசாத் அறிவித்தார். இப்படி பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக நின்றே ஆக வேண்டும் என்பதில் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் உறுதியாக இருந்ததால்தான் மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளனர்.
அரசியலில் சம பலத்துடன் கால் நூற்றாண்டு காலம் எதிர் எதிர் துருவங்களாக அரசியல் செய்த இரு கட்சிகள் சமூகநீதி என்ற அடிப்படை கொள்கைக்காக ஒரே கூட்டணியாக சேர முடியும்; கூட்டணி அரசையுமே அமைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும்..
இந்த வெற்றி மூலம் இந்தியாவில் கூட்டணி ஆட்சி சகாப்தத்தையே ஒழித்தோம்... அழித்தோம் என்று மார்தட்டிய கூக்குரல்களின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு மவுனியாக்கி மகத்தான சாதனை படைத்திருக்கிறார்கள் நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications