ஐபிஎல் 2023.. கேகேஆர் அணிக்கு சோதனை காலம் போல.. நிதீஷ் ராணாவுக்கும் காயம்!
கொல்கத்தா: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ராணா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சியில் இருந்து வெளியேறியுள்ளார். அவரது காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நட்பபாண்டு ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், வீரர்களும் ஆவலாக இருக்கின்றனர்.
ஆனால் கொல்கத்தா அணி பற்றி வெளியாகி வரும் செய்திகள் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயாஸ் பங்கேற்பதில் சிக்கல்
இதனால் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஃபெர்குசன் காயமடைந்தார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தசை பிடிப்பு காரணமாக ஃபெர்குசன் ஓய்வில் இருக்கிறார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் ஃபெர்குசன் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கேப்டன் யார்?
இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்றால், நிதீஷ் ராணா அல்லது சுனில் நரைன் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானது. இந்திய வீரர் என்பதால் நிதீஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்படவே வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. இறுதி முடிவை கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திகாந்த் பண்டிட் இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளார்.

நிதீஷ் ராணா காயம்
இந்த நிலையில் கொல்கத்தா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நிதீஷ் ராணாவுக்கு வலைபயிற்சியின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேறிய நிதீஷ் ராணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேகேஆர் விளக்கம்
இதுகுறித்து கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில், நிதீஷ் ராணாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் விரைவில் சரியாகும். விரைவில் அவர் பயிற்சிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேப்டன் உட்பட இரு முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், நிதீஷ் ராணாவும் காயமடைந்தது அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications