என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரம்... பிரதமரிடம் 48 அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தல்
டெல்லி: என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்த கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் 48 பேரும் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதேபோல் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த போராட்டத்தில் குதித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 18-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தையும் தொடங்கி உள்ளனர்.

தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்.கள் 48 பேர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, என்.எல்.சி. தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதமர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும், நிலக்கரித்துறை அமைச்சர், அதிகாரிகளையும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து பேசினர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications