தேமுதிகவுடன் கூட்டணியெல்லாம் இல்லை- திருநாவுக்கரசர் விளக்கம் #thirunavukkarasar
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நட்பு ரீதியில்தான் சந்தித்தேன். பொதுப் பிரச்சினைகளில் இணைந்து செய்லபடுவோம் என்றுதான் கூறியிருந்தேன். அதற்கு கூட்டணி என்று அர்த்தம் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ். திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லி சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவர் இன்று சந்தித்துப் பேசினார். சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க ராகுல் சென்னை வந்திருந்தார். அப்போது தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் காங்கிரஸ் துணையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

தமிழக அரசை நிலை குலையச் செய்ய பாஜக முயற்சிப்பதாகவும், அப்படி நடந்தால் அதை காங்கிரஸ் எதிர்த்துப் போராடும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் திருநாவுக்கரசர் டெல்லி வந்துள்ளார். அங்கு இன்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது நேற்று சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைச் சந்தித்தது குறித்தும், தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு திருநாவுக்கரசர் பதிலளிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர். நடிகராக இருந்தபோதே நண்பர். அந்த வகையில் நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.
தமிழக நலன் கருதி, தமிழகத்தின் பிரச்சினைகளில், தமிழ் மக்களின் நலன் கருதி நடைபெறும் போராட்டங்களில் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவோம் என்றுதான் நான் கூறியிருந்தேன். நான் கூறியதற்கு அதுதான் அர்த்தம். கூட்டணி என்று அர்த்தம் அல்ல. தேமுதிக மட்டுமல்ல, எந்தத் தலைவரிடமும் நான் கூட்டணி குறித்துப் பேசவில்லை.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ இப்போது இல்லை. எனவே கூட்டணி குறித்து யாருடனும் பேச வேண்டிய தேவை இப்போது இல்லை.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேசிக் கொண்டிருந்தோம், பேசிக் கொண்டிருக்கிரோம். தொடர்ந்து பேசுவோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன் என்றார் திருநாவுக்கரசர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications