ஜல்லிக்கட்டு பற்றி அமைச்சரவையில் விவாதிக்கவேயில்லை.. கைவிரித்த ஜவடேக்கர்
டெல்லி: டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த எப்படியும் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர்கள் மீண்டும், மீண்டும் கூறிவருகிறார்கள். இதை எதிர்பார்த்து பல்வேறு ஊர்களிலும் போட்டி அமைப்பாளர்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். பலர் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் ஏதேனும் அவசர சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது என கூறிவிட்டார் ஜவடேக்கர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications