குஜராத்தில் விடிஞ்சா சட்டசபை தேர்தல்... இப்பதான் தேர்தல் அறிக்கையையே வெளியிடுது பாஜக!
குஜராத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் சற்று முன்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக.
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாழ்வா சாவா என போராடிக் கொண்டிருக்கும் பாஜக தற்போதுதான் தேர்தல் அறிக்கையையே வெளியிட்டிருக்கிறது.
குஜராத்தில் 22 ஆண்டு காலமாக நீடித்து வரும் பாஜக ஆட்சி அம்போவாகிவிடுமோ என அலறிப் போய் கிடக்கிறது பாஜக. கருத்து கணிப்புகள் எனும் பெயரில் டிவி சேனல்கள் என்னதான் பாஜக வெல்லும் என திணிக்க முற்பட்டாலும் அக்கட்சிக்கு பின்னடைவுதான் என்பதை மறைக்கவும் முடியவில்லை.

இந்த நாட்டின் பிரதமர் என்பதையே மறந்துவிட்டு குஜராத் மண்ணின் மகன்.. என்னைப் பாருங்கள். எனக்காக ஓட்டுப் போடுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த கால தேர்தல் களங்களைப் போல இல்லாமல் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நின்று நிதானமாக வியூகம் வகுத்து விளையாடி வருகிறது.
பாஜகவோ, விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாமல் ஹர்திக் படேல் உள்ளிட்டோர் குடித்தனர்; பெண்களுடன் இருந்தனர் என சிடி தயாரிப்பில் பிஸியாகிவிட்டது. அதனால்தான் ஒரு மாநில சட்டசபை தேர்தலை முன்வைத்து வெளியிட வேண்டிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட மறந்து போய்விட்டது.
குஜராத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆனாலும் பாஜகவோ தேர்தல் அறிக்கையையே வெளியிடாத பரிதாப நிலையில்தான் இருந்தது. இது எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதனால் வேறுவழியே இல்லாத நிலையில் தற்போது தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications