2024 லோக்சபா தேர்தல் வருதில்ல.. பாஜகவுக்கு போட்டியே இல்ல! யாரு எதிர்க்கட்சி? அடித்து சொல்லும் அமித்ஷா
2024 லோக் சபா தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அகர்தலா: 2024 லோக் சபா தேர்தலில் பாஜகவுக்கு எந்த போட்டியும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருக்கிறார். அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் கண்டு இருப்பதாக கூறிய அவர், வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
திரிபுராவில் நடைபெறும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அதில், "நாட்டு மக்கள் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் முதன்மை எதிர்க்கட்சி யார் என்பதை முடிவு செய்வார்கள். இந்த பட்டத்தை எந்த எதிர்கட்சிக்கும் அவர்கள் வழங்க மாட்டார்கள்.

மாநிலங்களில் பாஜக சிறப்பான செயல்பாடு
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ராகுல் காந்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்த எதிர்க்கட்சிகளின் பலத்தை காட்டும். இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக சிறப்பாக செயல்பட்டு உள்ளது.

வளர்ச்சியடையும் இந்தியா
இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

முதன்மை நோக்கம்
நாட்டின் வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாற்றுவது ஆகியவைதான் மத்திய அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் சாதனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. மிக குறுகிய இந்த 8 ஆண்டு காலத்தில் நாட்டின் 60 கோடி மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சி செய்து வெற்றியும் கண்டு இருக்கிறோம்.

முன்னேற்றம்
ரயில்வேயில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். விண்வெளி ஆராய்ச்சி துறையில் புதிய கொள்கைகளை வகுத்து உள்ளோம். அந்த துறையில் தலைமையேற்க முயன்று வருகிறோம். ட்ரோன் பிரிவிலும் வளர்ச்சியை நோக்கி புதிய கொள்கைகளை வகுத்து உள்ளோம். இந்தியாவை உற்பத்தியின் மையமாக உருவாக்க வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பயங்கரவாதம்
இடதுசாரி பயங்கரவாதம் முடிவுக்கு வர உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை நமது நிறுவனங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் போராளி குழுக்களை ஒடுக்க தீர்வு கண்டு வருகிறோம். மத்திய அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் சென்று இருக்கிறது.

மோடியின் தலைமை
திரிபுராவில் ஒரு ஏழை வீட்டுக்கு சாப்பிட சென்றேன். மத்திய அரசின் ரேஷன் திட்டத்தில் பெற்ற ஒரு அரிசியை காட்டி விற்க முடிவதாக கூறினார். அந்த வீட்டில் பூச்சு பூசப்பட்டு இருந்தது. எனவே மாற்றம் தெரிகிறது. வரும் 2024 லோக் சபா தேர்தலில் எந்த போட்டியும் இருக்காது. நாட்டின் அனைத்து மக்களும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விரும்புகிறார்கள்.

போட்டியே இல்லை
நாட்டின் முதன்மை எதிர்க்கட்சி எது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். லோக் சபாவில் எந்த கட்சிக்கு தலைமை எதிர்க்கட்சி என்ற பட்டத்தை மக்கள் இதுவரை வழங்கவில்லை. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையின் தாக்கத்தை 3 மாநில தேர்தலில் பார்ப்போம். காங்கிரஸ் முன்பு வலிமையாக இருந்த மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் முடிவுகளில் பாஜக முழு பெரும்பான்மை பெறும்." என்றார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications